பிறந்தது 2022 புத்தாண்டு - ஆங்கில புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்து

newzealand 2022newyear
By Irumporai Dec 31, 2021 11:50 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உலகம் முழுவதும் 2022 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர். இந்த நிலையில் உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது.

உலகின் நேரக்கணக்கின்படி நியூசிலாந்தில்தான் முதலில் புத்தாண்டு பிறக்கும். அந்த வகையில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2022 புத்தாண்டு பிறந்துள்ளது.

நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் உள்ள மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர்.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்து முழக்கங்களை எழுப்பி 2022-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து இன்னும் சில மணிநேரங்களில் இந்தியாவிலும் 2022 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்திய மக்களும் உற்சாகத்துடன் புத்தாண்டை எதிர்நோக்கி காத்துள்ளனர்.