பச்சிளம் குழந்தையின் தலையை கொண்டு வந்த நாய் - உடல் எங்கே? தேடும் போலீசார்

Dog Madurai Head Born Child
By Thahir Sep 09, 2021 05:00 AM GMT
Report

மதுரையில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் தூக்கி வந்த சம்பவத்தில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தக் குழந்தையின் உடல் தேடப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுரை பீபி குளம் பகுதியில் நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் உடலை தூக்கி வந்ததைக் கண்ட அய்யனார் என்பவர், காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பச்சிளம் குழந்தையின் தலையை கொண்டு வந்த நாய் - உடல் எங்கே? தேடும் போலீசார் | Born Child Head Dog Madurai

அதன்பேரில் அங்கு சென்று காவல்துறையினர் குழந்தையின் தலையை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையின் உடல் எங்கே என தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மதுரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் பட்டியல்களும் சேகரிக்கப்படுகின்றன.

இதனிடையே குழந்தையின் தலையை நாய் தூக்கி வந்த இடத்தினை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.