பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தையை கொன்ற தாய்..

Namakkal Born baby killed
By Petchi Avudaiappan Jul 18, 2021 05:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

நாமக்கல் அருகே பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கு கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி உடல்நலம் சரியில்லாமல் குழந்தை உயிரிழந்ததாக கூறி உடலை உறவினர்கள் சுடுகாட்டில் புதைத்தனர்.

ஆனால் பிறந்த குழந்தை ஒருவாரத்தில் உயிரிழந்ததால் சந்தேகமடைந்த சுகாதாரத்துறையினர் சார்பில் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 14 ஆம் தேதி குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இதில் குழந்தை தலையில் அடிபட்டு உயிரிழந்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் குழந்தையின் தலையில் அடித்துக் கொன்றதாக தாய் கஸ்தூரி ஒப்புக்கொண்டார். அவரை எருமப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.