3வது மனைவி; 59 வயதில் 8 வது குழந்தைக்கு தந்தையான போரிஸ் ஜான்சன்!
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், 59 வது வயதில், 3வது மனைவி மூலம் 8 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், மனைவியான மரினா வீலருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற இவர்
தனது காதலியான கேரி சைமண்ட்ஸுனை திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின் அவர்களுக்கு 2020ல் வில்பிரட் லாரி நிகோலஸ் ஜான்சன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
8 வது குழந்தை
தொடர்ந்து, கேரி சைமண்ட்ஸுனை 3வது திருமணம் செய்துக்கொண்டார். 2021ல் இவர்களுக்கு ரோமி என்ற பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில், எங்கள் குடும்பத்தில் இன்னும் ஓரிரு வாரத்தில் புதிய உறுப்பினர் இணைந்துவிடுவார்.
கடந்த எட்டு மாதங்களாக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் என கேரி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு கடந்த 5-ம் தேதி குழந்தை பிறந்ததாக செய்திகள் வெளியாகியது. இன்ஸ்டாகிராமில் கேரி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.