பருவநிலை மாற்றம் அச்சுறுத்தலாக இருக்கிறது - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

borisjohnson climatechange
By Petchi Avudaiappan Nov 01, 2021 05:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

பருவநிலை மாற்றம் அச்சுறுத்தலாக இருப்பதாக பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகமானது, மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவை முன்கூட்டியே எச்சரிக்கும் டூம்ஸ்டே சாதனத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதாக கூறினார். 

மேலும் தொடர்ந்து வெப்பமடையும் பூமியின் நிலையை ரகசிய ஏஜென்ட் ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டு பேசிய போரிஸ் ஜான்சன் கிரகத்தை அழிக்கும் ஒரு வெடிகுண்டுடன் கட்டப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் அதை செயலிழக்க வைக்க முயற்சிப்பதாகவும், தற்போது நாமும் தோராயமாக அதே நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிப்பதால் ஏற்படும் பருவநிலை மாற்றம் அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும் இவை அனைத்தும் கிளாஸ்கோவில் நிலக்கரி மூலம் இயங்கும் ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரத்தில் தொடங்கியது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது என மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.