ஒமைக்ரான் வைரஸுக்கு பிரிட்டனில் ஒருவர் உயிரிழப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
ஒமைக்ரான் கொரோனா தொற்று டெல்டா வைரஸ்களை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்றும், தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கக் கூடிய அளவிற்கு வீரியமிக்கது என்று உலக சுகாதாரத் துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
மேலும் ஒமைக்ரான், உலகளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்றுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “ஒமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது என்றும் , ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது என்றும் தெரிவித்தார்.