உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் புதின் நிச்சயம் தோற்பார் - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை
உக்ரைனுடனான போரில் ரஷ்ய அதிபர் புதின் நிச்சயம் தோற்பார் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக இதற்கான பணிகளில் இருந்த போது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 6 நாட்களாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்துவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில் உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் புதின் நிச்சயம் தோற்பார் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் நண்பர்களுக்கு நாம் தொடர்ந்து உதவுவோம் என்றும், எவ்வளவு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை உதவிகள் தொடரும் எனவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.