சீனா உடன் பனிப்போரா? பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதில்

Boris Johnson China Britain Nato
By mohanelango Jun 14, 2021 11:36 AM GMT
Report

உலக வல்லரசு நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 நாடுகளின் தலைவர்களின் மாநாடு பிரிட்டனில் நடைபெற்று வருகிறது.

ஜி7 நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்து கொண்ட பிரிட்டனில் முகாமிட்டுள்ளனர். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு ஜோ பைடன் முதல் முறையாக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தில் நோட்டோ இராணுவ அமைப்பின் முக்கியமான கூட்டமும் நடைபெற்றது. கடந்த நூற்றாண்டில் சோவியத் ரஷ்யா மேற்குலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

சீனா உடன் பனிப்போரா? பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதில் | Boris Johnson Clarifies On Cold War With China

21-ம் நூற்றாண்டில் சீனாவின் எழுச்சி நோட்டோ நாடுகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருங்கிணைத்து வருகிறார்.

இந்த நிலையில் சீனா உடன் புதிய பனிப்போரை தொடங்க நேட்டோ நாடுகள் விரும்பவில்லை என பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால் சீனாவின் எழுச்சியால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட நோட்டோ நாடுகள் முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.