தமிழகத்துக்கு வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

india Boris Johnson world modi
By Jon Mar 25, 2021 03:11 PM GMT
Report

பிரித்தானியா பிரதமரான போரிஸ் ஜான்சன், அடுத்த மாதம் அரசு முறை பயணமாக தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு வருகை தரும் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருப்பதும், ராமேஸ்வரம்- தனுஷ்கோடியை பார்க்க போரிஸ் ஜான்சன் ஆவலாக இருப்பதுமே தமிழகத்தை தேர்வு செய்ததற்கான காரணம் என சொல்லப்படுகிறது. இதற்காக டெல்லியிலிருந்து வந்த பிரித்தானியா நாட்டு தூதரக அதிகாரி ஒருவர், ராமேஸ்வரம் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அவருடன் இந்தியாவின் பாதுகாப்பு பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் உடன் சென்றதாக தெரிகிறது. பிரதமரின் பயணத்தின் போது, பிரித்தானியா சார்பில் கடலில் காற்றாலை அமைக்க இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டுள்ளதாம். மகாராஷ்டிரா அல்லது தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்த காற்றாலை அமைக்கப்படலாம் என தெரிகிறது.

எனினும் பிரதமரின் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை, ஒருவேளை பயணம் உறுதி செய்யப்பட்டால், 15 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.