இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்..!

Boris Johnson Prime minister
By Thahir Apr 21, 2022 04:18 AM GMT
Report

இரண்டு நாள் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்து சேர்ந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கியுள்ள ஹோட்டல் வரையிலும் இரு புறமும் மக்கள் கையசைத்து வரவேற்றனர். சாலையோரங்களில் ஆங்காங்கே கலைஞர்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிடும் போரிஸ் ஜான்சன்,இந்திய முன்னணி தொழில் நிறுவன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தகம்,புதிய முதலீடுகள் குறித்து விவாதிக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இங்கிலாந்து பிரதமருக்கு பாரம்பரிய வரவேற்பு மரியாதை அளிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பொருளாதாரம்,பாதுகாப்பு பல்வேறு துறைகளில் இந்தியா - பிரிட்டனிடையே ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை. இந்த சந்திப்பின் போது ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை எனத் தகவல்