‘நான் செஞ்சது தப்புதான்’ - பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் பிரதமர்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்க உள்ள என அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று பிரிட்டனில் கடும் விளைவை ஏற்படுத்தியது. இதனிடையே கொரோனா உச்சத்தில் இருந்த போது ஜூன் மாதம் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
விதிமுறையை மீறியதால் அந்நாட்டு காவல்துறை போரிஸ் ஜான்சன் உட்பட 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டது. இந்த நிகழ்வினால் அந்நாட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் போரிஸ் ஜான்சனை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சியின் தொடர் அழுத்தம் காரணமாக போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கவுள்ளாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், விதிமுறைகளை மீறியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார்.