ஒன்றிய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம் - கவிஞர் வைரமுத்து

Government of Tamil Nadu Government Of India Vairamuthu
By Thahir May 18, 2023 10:00 PM GMT
Report

``மாநில அரசு கடுமை காட்டினால் கள்ளச் சாராயத்தை ஒழித்து விடலாம். ஒன்றிய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம்'' என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சாராயம் ஒரு திரவத் தீ

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கள்ளச் சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

booze-is-a-liquid-fire-vairamuthu

இந்தநிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’சாராயம் ஒரு திரவத் தீ. கல்லீரல் சுட்டுத்தின்னும் காட்டேரி. நாம் விரும்புவது கள்ளச் சாராயமற்ற தமிழ்நாட்டை அல்ல; சாராயமற்ற தமிழ்நாட்டை. மாநில அரசு கடுமை காட்டினால் கள்ளச் சாராயத்தை ஒழித்துவிடலாம். ஒன்றிய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.