90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு: அதிர்ச்சி சம்பவம்

people political Assam voters
By Jon Apr 06, 2021 01:29 PM GMT
Report

அசாமில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தகவல்கள் வெளியாகி அதிரவைத்துள்ளன. அசாமில் கடந்த 1ம் தேதி 2ம் கட்ட வாக்குபதிவு நடந்தது, இதில் திமா ஹசாவ் மாவட்டத்தில் ஹப்லாங் தொகுதிக்கு உட்பட்ட பூத் ஒன்றில் 181 வாக்குகள் பதிவாகி இருந்துள்ளது.

ஆனால், அந்த பூத்திற்கு உட்பட்ட பகுதியில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களே உள்ளனர். இந்த விவகாரம் தெரியவர, 6 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், இதனையடுத்து குறித்த பூத்தில் மறு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.