இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? ஐசிஎம்ஆர் பதில்

By Fathima Oct 01, 2021 07:48 AM GMT
Report

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி தற்போதைய நிலையில் பொருத்தமானது அல்ல என ஐசிஎம்ஆர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிதீவிரமாக நடந்து வருகிறது. 

ஆனால் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர், இதனைதொடர்ந்து அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா கூறுகையில், 'இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? என்ற கேள்வியை பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்து கொண்டே இருக்கிறது.

தற்போதைக்கு வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில்தான் இந்திய அரசின் முழுக்கவனம் இருக்கிறது. பூஸ்டர் டோஸ் என்பது தற்போதைய நிலையில் பொருத்தமானது அல்ல' என, தெரிவித்துள்ளார்.