ஆஸ்கார் வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க - சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பொம்மன் பெல்லி
ஆஸ்கார் வென்ற பொம்மன் பெல்லி தமபதி தற்போது சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு வருவதாக அவர்களது வழக்கறிஞர் பிரவீன் ராஜ் குற்றம்சாட்டியுள்ளா
ஆஸ்கர் வென்ற கதை
முதுமலை காட்டில் குட்டியானையை வளர்த்து வந்த பொம்மன் பெல்லி தம்பதிகளின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட documentary திரைப்படம் "The Elephant Whisperers". அந்த படம் ஆஸ்கார் வென்றதை அடுத்து பொம்மன் பெல்லி இருவரும் மிக பெரிய அளவில் பிரபலமாகினர்.
படம் எடுக்கும் போது, படத்தின் இயக்குனர் கார்த்தகி தங்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்ததாகவும் ஆனால், தற்போது வரை அவர்களுக்கு எதுவுமே செய்துதரவில்லை என பொம்மன் பெல்லி தம்பதிகளின் வழக்கறிஞர் பிரவீன் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் தம்பதி
இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வறுமையில் வாடும் பொம்மன் பெல்லி தம்பதி, தற்போது சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தற்போது கார்த்தகியிடம் வினவிய போது, தங்கள் உதவி செய்து தருவதாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லையே என கூறியதாகவும் பிரவீன் ராஜ் குற்றம்சாட்டி இருக்கிறார்.