சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி - தொடங்கியது முன்பதிவு

vaccine india corona children
By Irumporai Jan 01, 2022 03:15 AM GMT
Report

தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடைய சிறுவர்கள் ஜனவரி 1 ம் தேதி முதல் cowin இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் 15 - 18 வயதான சிறுவர்கள் ஜனவரி 3 ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்தநிலையில், ஜனவரி 1 ம் தேதியான இன்று நாடுமுழுவதும் 15-18 வயதுக்குட்பட்ட சிறார் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கியது.

cowin இணையதளத்தில் 15-18 வயதுக்குட்பட்ட சிறார்கள் தங்களது ஆதார், பாஸ்போர்ட், பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது

உருமாறிய கொரோனாவாக உருவெடுத்துள்ள ஒமைக்ரான் வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு கடந்த ஞாயிற்று கிழமை இரவு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அந்த உரையில், இந்தியாவில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறுவர் சிறுமியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.