ஒரு முழு ரயில் பெட்டி: ஆட்டம் பாட்டம் என களைகட்டிய திருமண நிகழ்வு

Wedding Marriage
By Fathima Apr 06, 2026 07:22 AM GMT
Report

திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் படை சூழ சந்தோஷங்களுக்கு தடை இருக்காது.

இன்றைய சூழலில் பலரும் விதவிதமான கொண்டாட்ட நிகழ்வுகளை அரங்கேற்றுகின்றனர், அந்த வகையில் சமீபத்தில் நடந்த திருமணத்தை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

அதாவது, இந்தியாவில் திருமண பயணத்திற்காக ஒரு முழு ரயில் பெட்டியை முன்பதிவு செய்து பயணித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஒரு முழு ரயில் பெட்டி: ஆட்டம் பாட்டம் என களைகட்டிய திருமண நிகழ்வு | Booked Entire Train Coach For Marriage

அந்த வீடியோவில் ரயில் பெட்டி வெளியே மாலையால் அலங்காரம் செய்து உறவினர்களை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்.

வயதானவர்கள் முதல் இளசுகள் வரை பாடலுக்கு ஆட்டம் போடுகின்றனர், மணப்பெண் கேக் வெட்டும் போது கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை.

ஒரு முழு ரயில் பெட்டி: ஆட்டம் பாட்டம் என களைகட்டிய திருமண நிகழ்வு | Booked Entire Train Coach For Marriage

தொடர்ந்து உறவினர்கள் மணமக்களுக்கு பரிசுகளை அளித்து மகிழ்ந்தனர், குறித்த வீடியோ காட்சிகள் வைரலாக பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

ஒட்டு மொத்த குடும்பத்தினரின் ஒற்றுமை மெய்சிலிர்க்கவைப்பதாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.