சென்னையில் புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு

Chennai
By Thahir Jan 22, 2023 03:58 AM GMT
Report

சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது.

இன்று மாலையுடன் நிறைவு 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (ப்பாசி) சார்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 6ம் தேதி தொடங்கியது.

பிரமாண்டமாக நடைபெற்று வந்த புத்தக கண்காட்சியில் 1000 அரங்குகள் இடம்பெற்று இருந்தன. கடந்த 17 நாட்களாக நடந்த புத்தக கண்காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

Book fair in Chennai ends today

புத்தக காட்சி வளாகத்தில் உள்ள சிற்றரங்கம், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கில் மாலையில் சிறப்பு உரையரங்கங்களுமட், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த நிலையில் புத்தக கண்காட்சி நிறைவு விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் கலந்துகொண்டு பேசுகிறார்.