யூரோ கோப்பை பைனலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்: கிண்டல் செய்த இத்தாலி வீரர்

England Euro Cup final Itali Leonardo Bonucci
By Petchi Avudaiappan Jul 12, 2021 10:31 AM GMT
Report

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ரசிகர்களை நோக்கி இத்தாலி வீரர் கிண்டல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - இத்தாலி அணிகள் மோதின. இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. 

போட்டியின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் போனுக்சி அடித்த கோல் ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்து வெற்றியை நிர்ணயித்தது. அவர் போட்டியின் நடுவில் இங்கிலாந்து ரசிகர்களை நோக்கி நிறைய பாஸ்தா சாப்பிட வேண்டும் என கிண்டலாக கூறினார்.

மேலும் கோப்பை ரோம் நகருக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கேமரா முன்பு அவர் பேசியது ரசிகர்களை கடுப்பேற்றியது.