‘லவ் டுடே’ படத்தின் ரீமேக் உரிமை - மறுப்பு தெரிவித்த போனிகபூர்...!

Boney Kapoor Love Today Pradeep Ranganathan
By Nandhini Jan 02, 2023 08:12 AM GMT
Report

‘லவ் டுடே’ படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என்று பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

‘லவ் டு டே’ படம்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் கவனம் ஈர்த்து வருகிறார். இயக்குநர் பிரதீப் ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.‘கோமாளி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார் பிரதீப்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு போன்ற சீனியர் நடிகர்களும் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். ‘லவ் டுடே’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றைய இளைய தலைமுறை இந்த படத்தை கொண்டாடி வந்தனர்.

தெலுங்கில் ஹிட்டடித்த ‘லவ் டுடே’

தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டார் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. தமிழைப் போல் தெலுங்கிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வந்தது.

boneykapoor-love-today-pradeep-ranganathan

போனி கபூர் மறுப்பு

‘லவ் டுடே ’படத்தின் இந்தி ரீமேக் உரிமையை துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியதாகவும், இப்படத்தை இந்தியில் டேவிட் தவான் இயக்க உள்ளதாகவும், அவரது மகனும் முன்னணி பாலிவுட் நடிகருமான வருண் தவான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘லவ் டுடே’ படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. அப்படி வெளியாகும் தகவல்கள் ஆதரமற்றது. உண்மையல்ல... என்று பதிவிட்டுள்ளார்.