மொத்தாமாக ரூ 4 லட்சம் , சோகத்தில் அஜித் பட தயாரிப்பாளர் ..

By Irumporai May 28, 2022 05:43 AM GMT
Report

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் கிரெடிட் கார்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ரூ. 3.82 லட்சத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர் பரிவர்த்தனை செய்ததாக அவரது உதவியாளர் புகார் அளித்துள்ள்தாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரின் கிரெடிட் கார்டை அவருக்கு தெரியாமலே மர்ம நபர்கள் பயன்படுத்தி பொருள்களை வாங்கி இருப்பதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியில் இருந்து போனி கபூருக்கு அழைப்பு வந்தது.

மொத்தாமாக ரூ 4 லட்சம்  , சோகத்தில் அஜித் பட தயாரிப்பாளர் .. | Boney Kapoors Credit Card Transactions

அதில் கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை என்று வங்கி ஊழியர் தெரிவித்த போதுதான் போனி கபூருக்கு தனது கிரெடிட் கார்டு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

போனி கபூர் உடனே வங்கியில் இருந்து கிரெடிட் கார்டு பயன்படுத்திய விவரங்களை கேட்டு பெற்ற போது ரூ.3.82 லட்சம் அளவுக்கு போனி கபூர் கிரெடிட் கார்டில் இருந்து செலவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

மொத்தம் 5 பரிவர்த்தனைகளில் இந்த மோசடி நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போனி கபூரின் உதவியாளர் மும்பை அந்தேரி அம்போலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கிரெடிட் கார்டில் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்திய ஐபி ஐடியை பயன்படுத்தியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.