அப்புறம் மக்களே ரெடியா ? பட்டைய கிளப்பும் வலிமை எஃப்டிஎஃப்எஸ்

AjithKumar boneykapoor ValimaiFromFeb24
By Irumporai Feb 16, 2022 08:04 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது. இதனால், வலிமை அப்டேட் வேண்டும் என அஜித் ரசிகர்கள் இணைத்தில் டிரெண்ட் செய்து வந்தனர்.

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் பட்டையை கிளப்பும் வகையில் புது ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்யும் வகையில் அட்டகாசமான புது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் திரைப்படம் வலிமை என்றும் தமிழ்,தெலுங்கு, இந்தி,கன்னடம் என 4 மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிப்ரவரி 24ந் தேதி வலிமை திரைப்படம் வெளியாகும் என்றும் அந்த வீடியோவில் மாஸ் அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.