நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவுகளை தமிழக அரசே ஏற்கும் : அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

Ma. Subramanian
By Nandhini Sep 22, 2022 10:08 AM GMT
Report

நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகர் போண்டாமணி

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் வலம் வந்தவர் போண்டாமணி. இவருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மிக மோசமான நிலையில் மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

மேலும், பிரபல நடிகர் பெஞ்சமின் போண்டா மணிக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானதையடுத்து, பலர் போண்டா மணிக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்து வந்தனர்.

bonda-mani-ma-subramanian

நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்

இந்நிலையில், ஓமந்தாரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சந்தித்துள்ளார். அவரின் உடல்நிலை குறைத்து அவரிடம் விசாரித்ததோடு மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்த தகவலையும் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் டையாலிசிஸ் சிகிச்சை துவங்க இருக்கிறது.

அவரது உறவினர்கள் மூலமாகவோ அல்லது உறுப்பு தான ஆணையத்தின் மூலமாகவோ சிறுநீரகம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகள் அனைத்தையும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.