பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போரூர் அடுத்த மாங்காடு செருகம்பாக்கத்தில் பி.எஸ்.பி.பி பள்ளி செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் மாணவர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் பள்ளியில் வந்து சோதனையிட்டு வருகின்றனர்.
பரபரப்பு
முன்னதாக பள்ளிக்கு வந்திருந்த மாணவ மாணவிகளை பாதுகாப்பு கருதி வெளியே அனுப்பிய நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கோவையில் ஒரு பள்ளிக்கும் நள்ளிரவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனால் உடனே போலீசார் பள்ளியில் சோதனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் அது புரளி என தெரியவந்தது. ஆனால், யார் இந்த மிரட்டலை விடுத்தது என்பது இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.