‘ஒழுங்கா ரிசல்ட் விடுங்க’ - பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தேர்வு முடிவை வெளியிடக் கோரி மும்பை பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பல்கலைக்கழகத்தில் கொரோனா காரணமாக மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் பி.காம் மற்றும் பி.எஸ்.சி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டது.
அதற்கு முன்னால் பல்கலைக்கழகத்திற்கு ஒரு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் இளங்கலை தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடவில்லை என்றால் வெடிகுண்டு வைத்து பல்கலைக்கழகத்தை தகர்ப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வு மற்றும் மதிப்பீடு இயக்குநர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.