சென்னையில் உள்ள 6 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள 6 ஹோட்டல்களுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்கள் 6 ஹோட்டல்களில் நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் ஹோட்டல்களில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக ஒரு ஹோட்டலின் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தனியார் ஹோட்டல் நிர்வாகம் நேரடியாக காவல் ஆணையர் இமெயிலுக்கு அனுப்பி புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இமெயில் வந்த மின்னஞ்சல் முகவரியை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இன்னும் 3 நாட்களில் சுதந்திர தினம் வர உள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.