முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்...அலர்ட் ஆன போலீசார்
சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பில் மர்ம நபர் ஒருவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து அலர்ட் ஆன காவல்துறையினர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமை்சசர் கருணாநிதி வீடு மற்றும் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.