நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் விசாரணை
ajith
house
By Irumporai
நடிகர் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்ட இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் அஜீத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை முடிவில் அது வெறும் புரளி என தெரிய வர மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.