‘குண்டு ஒன்னு வச்சிருக்கோம்’ - கொச்சி கடற்படை தளத்திற்கு வந்த மிரட்டல்
கொச்சி கடற்படை தளத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் கேரள போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்று கேரளாவில் அமைந்துள்ள கொச்சி துறைமுகமாகும். இங்கு ஆண்டுதோறும் 2000 மேற்பட்ட கப்பல்கள் வந்து செல்லும் நிலையில், கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இயங்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் எனப்படும் கப்பல் கட்டும் தளமும் அமைந்துள்ளது.
இதனிடையே கப்பல் கட்டுமான தளத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு விரைந்த போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் மேலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்ததா என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இப்போது அங்கு தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.