விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு
Bomb threat
VijayaKanth
By Petchi Avudaiappan
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அடையாளம் தெரியாத நபர் போன் செய்து இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மோப்ப நாயுடன் நேரில் சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சுமார் அரை மணி நேரம் அவரது வீடு முழுவதும் சோதனை செய்தனர்.
இதில் சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் கிடைக்காததால் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.