காலையில் பரபரப்பு...பீதியடைந்த மக்கள்..சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை காவல்துறையினர் கட்டுப்பாடு அறைக்கு இன்று காலை திடீரென சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வாரம் முதல் நாளான இன்று மக்கள் அதிகளவில் பயனப்டுத்தும் இடத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் துரித நடவடிக்கையில் இறங்கினர்.
காவல் துறையினர் விசாரணை
இந்த செய்தி வெளியான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் வியாசர் பாடியை சேர்ந்த மணிகண்டனை கைது செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மணிகண்டன் ஏற்கனவே பலமுறை வெடி குண்டு மிரட்டல் புகாரில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.