தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

police department admk
By Jon Feb 12, 2021 02:46 PM GMT
Report

மதுபோதையில் முதல்வர் வீட்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் முதலமைச்சரின் சேலம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த செய்யாறைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். நேற்று காவல்துறை உதவி எண் 100க்கு அழைத்த மர்ம நபர், முதலமைச்சரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு, வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், திருவண்ணாமாலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த தறி தொழிலாளி அன்பழகன் என்பவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.