7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஷாக்கான நிர்வாகம் - மாணவர்கள் உடனடி வெளியேற்றம்
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் டெல்லி பப்ளிக் பள்ளி, வர்தூர்,கோபாலன் சர்வதேச பள்ளி, புதிய அகாடமி பள்ளி, செயின்ட் வின்சென்ட் பால் பள்ளி, இந்தியன் பப்ளிக் பள்ளி, கோவிந்த்புரா, எபினேசர் சர்வதேச பள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய 7 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் மின் அஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு ஒன்று வந்துள்ளது.
அந்த மின் அஞ்சலில், மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு உங்கள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இது காமெடி இல்லை. உடனடியாக போலீசை கூப்பிடுங்கள். இல்லாவிட்டால் நூற்றுக்கணக்கானோர் மாணவர்கள் இறந்துவிடுவார்கள். இதற்கு மேல் எல்லாம் உங்கள் கையில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது.
உடனடியாக பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகம் வெளியேற்றியது.
இதனையடுத்து, 7 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், போலீசாரும் விரைந்து வந்தனர். பள்ளி வளாகம் முழுவதும் போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் தீவிரமாக சோதனையிட்டனர்.
ஆனால், வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது வெறும் ஒரு புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
மின் அஞ்சல் அனுப்பியது யார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
