காபூல் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு - குழந்தைகள் உட்பட 20 பேர் பலி?

Afghanistan bombblast KabulAiport talibanattack
By Petchi Avudaiappan Aug 26, 2021 03:41 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குண்டு வெடித்ததில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் விலக்கி கொண்டதையடுத்து அங்கு தலிபான்கள் முழுமையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் மக்கள் உயிர் வாழ பயந்து நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இதனிடையே தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததாக அமெரிக்க ராணுவ இணை அமைச்சர் ஜான் கிர்பே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள், தாலிபான்கள், பொதுமக்கள் என பலர் காயமடைந்த நிலையில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மக்கள் நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் கூடியிருப்பதால் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஆப்கானின் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்கர்கள் விமான நிலையம் வர வேண்டாம் அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.