டி20 கிரிக்கெட் போட்டியின் போது குண்டு வெடிப்பு - தெறித்து ஓடிய பார்வையாளர்கள்..!

Afghanistan
By Thahir Jul 30, 2022 05:37 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த மைதானத்தில் குண்டு வெடித்தது.

கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு 

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.அந்நாட்டின் தலைநகரான காபுலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி நேற்று நடைபெற்றது.

ஷபெஜா டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெண்ட் - இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர் ஷல்மி அணிகள் மோதின. இப்போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் திரண்டு இருந்தனர்.

இந்த போட்டியின் பார்வையாளர்களாக ஐ.நா துணை துாதர் ராமிஸ் அலக்பரொவ் மற்றும் அரசின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Afghanistan Blast

போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ஒரு அரங்கில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

முதற்கட்ட விசாரணையில் கையெறி குண்டு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பால் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் ஹரசன் மாகாணம் பிரிவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.