அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு : பஞ்சாப்பில் பரபரப்பு

By Irumporai May 11, 2023 04:47 AM GMT
Report

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே நள்ளிரவில் குண்டு வெடித்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொற்கோயில் அருகே ஸ்ரீ குரு ராமதாஸ் ஜி நிவாஸ் விடுதியின் வெளியே வெடிகளை பயன்படுத்தி குண்டு வெடிப்பை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.

போலிசார் விசாரணை 

அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே கடந்த சில நாட்களாக சிறிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து வருகிறது. இந்த வாரத்தில் 3வது குண்டு வெடிப்பு சம்பவம் இதுவாகும். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் குண்டு வெடிப்பை நடத்தியதாக கைதான 5 பேரும் விசாரணையில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு : பஞ்சாப்பில் பரபரப்பு | Bomb Blast Near Amritsar Golden Temple

இதுதொடர்பாக பஞ்சாப் டிஜிபி கூறுகையில், முன்பு விவரிக்கப்படாத குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்கு தீர்க்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றார். மே 6 மற்றும் 8 ஆம் தேதிகளில் குண்டுவெடிப்புகளும் நடந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.