குண்டு வெடிப்பில் கால்பந்து வீரர்கள் 4 பேர் பலி

Bomb blast Somalia
By Petchi Avudaiappan Jul 31, 2021 12:35 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 சோமாலியாவில் பேருந்தில் குண்டு வெடித்து கால்பந்து வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரைக் கொன்று குவித்தும் வருவர்.

இதனிடையே சோமாலியாவில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் மாகாணமாக ஜுபாலந்த் பகுதியில் வாக்குப்பதிவு இந்த வாரம் தொடங்கியது. தேர்தலை இடையூறு செய்வோம் என்று அல் ஷபாப் குழுவினர் மிரட்டல் விடுத்திருந்தனர்.

அதன்படி சோமாலியா நாட்டில் கிளப் அணிகளுக்காக விளையாடும் கால்பந்து வீரர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் கால்பந்து வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.