பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு - 70 பேர் உயிரிழப்பு
நேற்று பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மசூதியில் பயங்கர குண்டு வெடிப்பு
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகர் மசூதி ஒன்று உள்ளது. இங்கு வழக்கம் போல் நேற்று மதியம் லுஹர் நேர தொழுகை நடைபெற்றுள்ளது.
இந்த தொழுகையில், சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அனைவரும் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.