பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு 30 பேர் உயிரிழப்பு,50 பேர் படுகாயம்
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள கிஸ்ஸா குவானி மார்கெட் பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் உயர் காவல்துறை அதிகாரி பேசுகையில் இந்த தாக்குதலில் 30 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் 50 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
படுகாயமடைந்துள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இந்த வெடிகுண்டு தாக்குதல் தற்கொலை படையினரால் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்