ஜும்மா தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு - 18 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
மசூதியில் குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் உள்ள மசூதியில் இன்று நடைபெற்ற ஜும்மா தொழுகையின் போது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குஜர்கா மசூதியின் இமாம் மௌவி முஜீப் ரஹ்மான் அன்சாரி உள்ளிட்ட 18க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதில் 21 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் உயர்மட்ட அமைச்சர்கள் மீது குறிவைத்து இநத பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் தாலிபான் அமைப்பின் இணை நிறுவனர் அப்துல் கானி பரதார் அங்கு சென்று திரும்பியுள்ளார். அவரை கொல்ல திட்டமிட்டு இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக ஹெராத் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் ஷா ரசூலி தெரிவித்துள்ளார்.