நைஜீரிய எண்ணெய் ஆலையில் குண்டு வெடிப்பு - 2 பேர் பரிதாப பலி

By Petchi Avudaiappan May 05, 2022 11:00 PM GMT
Report

நைஜீரியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தென் மாகாணமான இமோவில் உள்ள எண்ணெய் ஆலையில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில்  ஆலை தீப்பற்றி எரிந்தது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக் அபாட்டம் கூறியுள்ளார். 

இதனிடையே தற்கொலை படை பயங்கரவாதிகள் 2 பேர் தங்கள் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து ஆலையை தகர்க்க நுழைந்தபோது குண்டுகள் வெடித்து அவர்கள் உடல் சிதறி பலியானதாக அந்த ஆலை பணியாளர்கள் தெரிவித்துள்ளதாக உள்ளூர்  ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த எண்ணெய் ஆலையை தகர்க்க முயற்சித்ததன் பின்னணி என்ன என்பது உடனடியாக வெளியிடப்படவில்லை.