பிரதமர் மீது குண்டு வீச்சு தாக்குதல் - நுாலிழையில் உயிர் தப்பினார்

Japan
By Thahir Apr 15, 2023 09:20 AM GMT
Report

ஜப்பான் பிரதமர் மீது பைப் குண்டு வீச்சு தாக்குதல் நடந்த நிலையில் அவர் நுாலிழையில் உயிர் தப்பினார்.

பிரதமர் மீது குண்டு வீச்சு 

தெற்கு ஜப்பானில் உள்ள வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சென்ற பிரதமர் புமியோ கிஷிடா உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் கையைறிகுண்டை பிரதமர் புமியோ கிஷிடா மீது வீசி உள்ளார். அப்போது அந்த குண்டு வெடித்து புகைமூட்டம் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Bomb attack on Japanese Prime Minister

இந்த குண்டு வீச்சு தாக்குதலில் பிரதமர் அதிர்ஷ்டவசமாக நுாலிலையில் உயிர் தப்பினார்.பின்னர் பாதுகாவலர்கள் பாதுகாப்பாக பிரதமரை அழைத்துச் சென்றனர்.

ஜப்பானில் மீண்டும் பரபரப்பு 

இந்த நிலையில் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே கடந்த ஆண்டு இதே போன்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் தற்போது பிரதமர் மியோ கிஷிடா மீதும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.