பிரேசிலில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா.. புதிய உச்சத்தை தொட்ட பாதிப்புகள்.!
உலகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கி ஒரு வருடத்தை கடந்த பிறகும் அதன் பாதிப்புகள் குறையாமல் இருந்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. இரண்டாவது இடத்திலிருந்த இந்தியாவை பின்னுக்கு தள்ளி மீண்டும் பிரேசில் முதல் இடத்திற்கு வந்துள்ளது.
2020-ன் தொடக்கத்தில் பிரேசிலில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. மார்ச் 25-ம் தேதி பிரேசிலில் 97,586 தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. கடந்த 23-ம் தேதி தினசரி கொரோனா மரணங்கள் மூன்றாயிரத்தைக் கடந்தது.
கொரோனா பாதிப்புகள் மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரேசிலைத் தொடர்ந்து இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50,000 கடந்துள்ளது. பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனரோவின் தவறான அனுகுமுறையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை போலவே பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனரோ கொரோனாவை மிக அலட்சியமாக கையாண்டார். தற்போது கொரோனா மீண்டும் கோர தாண்டவம் எடுத்துள்ளதால் பொல்சனரோ மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது.