ரூ.3.73 கோடிக்கு சொகுசு காரை பரிசாகப் பெற்ற பிரபல நடிகர்
பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் 3.73 கோடிக்கு சொகுசு காரை பரிசாகப் பெற்றுள்ளார்.
பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் 3.73 கோடிக்கு சொகுசு காரை பரிசாகப் பெற்றுள்ளார். McLaren GT என்ற அந்த சொகுசு காரை அவருக்கு டி சீரிஸ் T-Series மியூசிக் நிறுவன சேர்மன் பூஷண் குமார் வழங்கியுள்ளார்.
3.73 கோடிக்கு காரை வாங்கிய பிரபலர்
அவரது அண்மை படமான பூல் புலாயா 2 Bhool Bhulaiyaa 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு டி சீரிஸ் சேர்மன் இந்தப் பரிசை வழங்கியுள்ளார். 2022ன் பாலிவுட் ப்ளாக் பஸ்டர் பட்டியலில் பூல் புலாயா 2 படம் இடம்பிடித்துள்ளது.
இதுவரை ரூ.180 கோடிக்கும் மேல் அந்தப் படம் வசூலித்துள்ளது. அவரது புதிய மெக்லாரன் கார் ஆரஞ்சு நிறத்தில் அட்டகாசமாக உள்ளது. காரின் சக்கரங்கள் பளபளக்கும் கருப்பு நிறத்தில் உள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் McLaren GT என்று கூறப்படுகிறது.
பாலிவுட் இளம் நடிகர் கார்த்திக் ஆர்யன், இப்படியான சென்சேஷனல் நியூஸில் அடிபடுவது இது முதன்முறையல்ல. சமீபத்தில் கார்த்திக் ஆர்யன், தனது பெயரையும் பிறந்த தேதியையும் ரசிசையின் மார்பில் டாட்டூவாக இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.
கார்த்திக் தனது பிறந்தநாளையொட்டி, மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பத்திரிகையாளர் மற்றும் ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த ரசிகையை சந்தித்தார்.
வைரலாகும் கார்த்திக் ஆர்யன்
இதுதொடர்பாக வெளியான ஒரு வீடியோவில், கார்த்திக் ஆர்யன் பத்திரிகையாளர்களால் பரிசாக வழங்கப்பட்ட கேக்குகளை வெட்டிய பின்னர் ரசிகர்களை வரவேற்றார்.
அப்போது, அந்த ரசிகை அவருக்கு பிறந்தநாள் கேக் வழங்கி டாட்டூ குத்தியதை பற்றி அவரிடம் சொன்னார். அதற்கு கார்த்திக் ஆர்யன் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, இது நிரந்தரமா? என ரசிகையிடம் கேட்க, அவரும் ஆமாம் எனப் பதிலளித்த பின்னர், கார்த்திக் தனது நன்றியை மீண்டும் தெரிவித்தார்.
பின்னர் அவருடன் சில புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகளுக்கு போஸ் கொடுத்தார். இதுகுறித்து அந்த ரசிகை கூறுகையில், “நான் அவருக்கு மிகப் பெரிய ரசிகை. நான் அவரை நேசிக்கிறேன். இது எனக்கு ஒரு கனவு நனவாகும் என்று கூறினார்.
நெட்ஃபிக்ஸ் இல் வெளியான தமாகா திரைப்படத்திற்குப் பிறகு கார்த்திக் தனது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்த இந்தப் படத்தில் செய்தி தொகுப்பாளராக நடித்தார்.
இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் கார்த்திக்கின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
பெண்களைத்தான் சைட் அடிப்பேன் - சாய்பல்லவி ஓபன் டாக்!