பாலிவுட்டில் பிச்சை எடுக்க வந்தவர் கங்கனா பெண் மேயர் ஆவேசம்
பாலிவுட் நடிகை கங்கனா ரனவத், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
பல மாநிலங்களில் கங்கனாவுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெண் மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில்,
'பாலிவுட்டில் பிச்சை எடுப்பதற்காக கங்கனா வந்தார். அவருக்கு தேவையான பிச்சை இங்கு கிடைத்தது.
மற்றவர்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார். சுதந்திரம் குறித்து கங்கனா கூறிய கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
உண்மையில் அவர் மன்னிப்பு கேட்பதற்கு கூட தகுதியற்றவர்.
பொய்களின் ராணியாக உலா வந்து கொண்டிருக்கிறார். அவரது கருத்துகள் எடுபடாது' என்றார்.