அதிக அழகால் பட வாய்ப்புகளை இழந்தேன் - பிரபல நடிகை வேதனை

Bollywood Indian Actress Actress
By Karthikraja Dec 26, 2024 11:00 AM GMT
Report

அதிக அழகாக இருப்பதாக கூறி இயக்குநர்கள் நிராகரித்ததாக பிரபல நடிகை வேதனை தெரிவித்துள்ளார்.

சினிமா துறை

சினிமாவில் சாதிக்க நடிப்பு திறமை மட்டும் இருந்தால் போதும் என சொல்லப்பட்டாலும் அழகும் தேவை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. 

தியா மிர்சா

ஆனால் அந்த அழகே ஒரு நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக காரணமாக அமைந்துள்ளது.

தியா மிர்சா

ஜெர்மன் தந்தைக்கும், பெங்காலி தாய்க்கும் பிறந்தவர் நடிகை தியா மிர்சா. இவரின் 4 வயதிலே இவரது பெற்றோருக்கு விவாகரத்து ஏற்பட்டதால் இவரின் தாய் தீபா, ஹைதராபாத்தை சேர்ந்த அகமத் மிர்சா என்ற நபரை 2வது திருமணம் செய்த்து கொண்டார்.

dia mirza

ஆரம்பகாலத்தில் மாடலிங் செய்து வந்த இவர், மிஸ் இந்தியா, மிஸ் ஆசியா பசிபிக் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான என் சுவாச காற்றே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழில் வெளியான மின்னலே படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘ரெஹ்னா ஹை தேரே தில் மே’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பாலிவுட்டில் பிரபலமானார்.

இயக்குநர்கள் நிராகரிப்பு

நல்ல கதை உள்ள படங்களில் நடிக்க தியா மிஸ்ரா ஆர்வம் காட்டியுள்ளார். ஆனால் இயக்குநர்கள் இவர் அதீத அழகாக உள்ளார் இந்த பாத்திரங்களுக்கு பொருந்த மாட்டார் என கூறி நிராகரித்துள்ளனர்.

இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், இயக்குநர்கள் என்னை மெயின் ஸ்ட்ரீம் நடிகையாக பார்த்ததால், நான் விரும்பிய நல்ல கதை கொண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமலேயே போனது" என கூறியுள்ளார். 

dia mirza

திருமணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் உறவு வைத்து கொள்வது தவறாக பார்க்கப்படுகிறது. இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சாஹில் சங்காவு என்பவரை திருமணம் செய்து விட்டு, பின்னர் 2019 ல் அவரை பிரிவதாக அறிவித்தார். பின்னர், வைபவ் ரெக்கி என்ற தொழிலதிபரை 2வது திருமணம் செய்து கொண்டார்.