‘எனக்கு உடை மாற்றவே டைம் இல்லை....’ - போலீசாரிடம் கூலா பதில் சொன்ன உர்பி ஜாவேத்...!

Bollywood
By Nandhini Jan 15, 2023 10:43 AM GMT
Report

பிரபல நடிகை உர்பி ஜாவேத்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் உர்பி ஜாவேத். இவர் அரைகுறை ஆடையில் எடுக்கும் ஆபாச புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவார். இவருடைய கிளுகிளுப்பான புகைப்படத்தைப் பார்த்து பலர் ஜொள்ளுவிட்டு வழிந்தாலும், பலர் இவருக்கு கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தே வருகிறார்கள். 

சமீபத்தில் கூட துபாயில் கவர்ச்சி உடையில் வீடியோ எடுக்கப்பட்டதால் போலீசாரிடம் வசமாக சிக்கியதாக தகவல் வெளியானது.

தற்போது, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ‘பதான்’ படத்தில் காவி நீச்சல் உடை அணிந்து ஷாருக்கானுடன் கவர்ச்சியாக நடனமாடிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு மத்தியில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு உர்பி ஜாவேத் ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், காவி உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ எடுத்தும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

bollywood-actress-uorfi-javed

எனக்கு உடை மாற்றவே டைம் இல்லை -

வீடியோ வைரலானதையடுத்து, நடிகை உர்பி ஜாவேத் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜனதா மகளிர் அணியை சேர்ந்த சித்ரா வாக் மும்பை போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் உர்பி ஜாவித்துக்கு சம்மன் அனுப்பினர். நடிகை உர்பி ஜாவேத் இன்று விசாரணைக்காக அம்போலி காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது, நடிகை உர்பியிடம் போலீசார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், நான் ஒரு இந்தியன், நான் விரும்பும் ஆடைகளை அணிய எனக்கு முழு உரிமை உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எனக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது.'எனது வேலைக்கு ஏற்ப இந்த ஆடைகளை அணிகிறேன்'.'நான் போட்டோ ஷூட் நடத்தி வருகிறேன்.

சில சமயங்களில் வேலை நெருக்கடியில் உடை மாற்ற நேரம் கிடைக்காது. உடை மாற்றிக் கொள்ள நேரமில்லாததால், நான் அப்படியே வெளியே செல்வேன், அப்போதுதான் புகைப்படக் கலைஞர்கள் வெளியே வந்து புகைப்படம் எடுக்கிறார்கள், அவை வைரலாகிறது என்று கூலாக பதில் கூறி போலீசாரையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.