விரைவில் பாலிவுட் நடிகருடன் கத்ரீனா கைஃபுக்கு திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பாலிவுட் பிரபலங்களான விக்கி கௌசல், கத்ரீனா கைஃப் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப்.
இவர் 2003 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்கி கௌசல் கத்ரீனா கைஃபை திருமணம் செய்துக்கொள்ள போவதாக செய்திகள் வலம் வருகின்றன.
விக்கி கௌசல் நடிகர் மட்டுமில்லாமல், உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் நடித்துள்ள சர்தார் உதாம் திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகிவுள்ளது.
இந்நிலையில் கத்ரீனா, விக்கி கௌசல் இருவரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறப்படுகிறது. திருமணம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இவர்களின் தரப்பிலிருந்து வெளியாகவில்லை.
இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.