பிரபல பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி

covid bollywood kajol tests positive actress kajol
By Swetha Subash Jan 30, 2022 08:15 AM GMT
Report

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

சமீப காலங்களில் பல பிரபலங்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தி சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவரான நடிகை கஜோலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சிறிது நேரத்திற்கு முன்பு, அவர் இந்த தகவலை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உறுதிபடுத்தியுள்ளார்.

கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மகள் நியாசா மற்றும் அஜய் தேவ்கனின் படத்தைப் பகிர்ந்து அதில், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மிஸ் யூ நியாசா, தேவ்கன் என பதிவிட்டுள்ளார்.

நடிகை கஜோல், தமிழில் 'மின்சார கனவு' என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின்பு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.