போதைப்பொருள் விவகாரம் - ஷாருக்கானை தொடர்ந்து பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் சோதனை

drug bollywood ananyapanday
By Irumporai Oct 21, 2021 12:30 PM GMT
Report

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைதாகியுள்ள நிலையில், அவரது வீடு மற்றும் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கப்பலில் சென்றனர்.அப்போது, தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர், ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஜாமின் கிடைக்காததால், மும்பையில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார்.

மகனுடன் ஷாருக்கான் சந்திப்புஇந்நிலையில், அவரை, தந்தை ஷாருக்கான் இன்று சந்தித்து பேசிய நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அதேபோல், நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும்  சோதனை நடத்தப்பட்டது.